நீண்டநாள் சைனஸ் பிரச்சினைக்கு தீர்வு - துணை முதல்வர் பவன் கல்யாண்க்கு அறுவை சிகிச்சை வெற்றி
ஹைதராபாத் , 20 ஏப்ரல் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண்க்கு சைனஸ் தொடர்பான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. உடல்நலக் குறைவு காரணமாக அவர் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள அபோலோ மருத்துவமனையில்
A


ஹைதராபாத் , 20 ஏப்ரல் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண்க்கு சைனஸ் தொடர்பான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

உடல்நலக் குறைவு காரணமாக அவர் ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள அபோலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு, ‘பங்க்ஷனல் எண்டோஸ்கோபிக் சைனஸ் சர்ஜரி (FESS) எனப்படும் நவீன முறையில் சைனஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் நலமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், குறைந்தது 10 நாட்கள் முழு ஓய்வு அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக சைனசைட்டிஸ் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த பவன் கல்யாண்க்கு மருந்துகள் மூலம் முழுமையான நிவாரணம் கிடைக்காததால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த முறையில் சைனஸ் பாதைகளில் உள்ள அடைப்புகள், பாலிப்ஸ் மற்றும் வீக்கம் நீக்கப்படுவதால், எதிர்காலத்தில் சுவாசக் குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு வாரம் வரை கனமான பொருட்களை தூக்குதல், மூக்கை பலமாக ஊதுதல் போன்றவற்றை தவிர்க்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக சைனஸ் பிரச்சினையுடன் சேர்த்து ஆஸ்துமா, முதுகு வலி மற்றும் அடிக்கடி காய்ச்சல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளாலும் அவர் பாதிக்கப்பட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சூழ்நிலையில், உடல்நலத்திற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கட்சி நிர்வாகிகளும், ரசிகர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA