Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 20 ஏப்ரல் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியில், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காலை முதலே பல்வேறு கிராமங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வீடு தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து, திமுக அரசின் நலத்திட்டங்கள், கடந்த ஆட்சியின் சாதனைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கி வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அப்பாவுவுக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
குறிப்பாக பெண்கள் பாரம்பரிய முறையில் வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.
இளைஞர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் உற்சாக கோஷங்கள் எழுப்பி பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்தினர்.
மேலும், குடிநீர், சாலை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உள்ளூர் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளை கேட்டறிந்த அப்பாவு, அவை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த வாக்கு சேகரிப்பில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு பிரச்சாரத்தை வலுப்படுத்தினர்.
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் வாக்கு சேகரிப்பு தீவிரமடைந்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam