வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது...முந்திரி மரம்!
சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.) முந்திரி மரமானது வெப்பமண்டல நாடுகள் பலவற்றில் வளர்க்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் பாங்கான நிலத்தில் நன்கு வ
ல


சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.)

முந்திரி மரமானது வெப்பமண்டல நாடுகள் பலவற்றில் வளர்க்கப்படுகிறது.

வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது.

நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் பாங்கான நிலத்தில் நன்கு வளரும் தன்மை கொண்டது.

இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.

மழை அளவு 50 முதல் 250 செ.மீ வரை உள்ள இடங்களிலும் நன்கு வளரும்.

முந்திரியில், முந்திரிப்பழம் என அழைப்பது, உண்மையில் பழமல்ல.

அது போலிப்பழம் என அழைக்கப்படுகிறது.

இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை.

பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது.

இது முந்திரி ஆப்பிள் எனவும் அழைக்கப்படுகிறது.

முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் உள்ள அமைப்பே உண்மையான பழம் ஆகும்.

இது உண்மையான பழமாக இருந்தாலும், இதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது.

அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.

Hindusthan Samachar / Durai.J