Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.)
திரு.வி.க.நகர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுகிறார்.
அவர் தினமும் காலை முதல் இரவு வரை தொகுதி முழுவதும் வீதி, வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
அவர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று, எங்கள் வீட்டுப் பெண் நீங்கள் நாங்கள் கண்டிப்பாக இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்போம் என உறுதி அளித்தனர்.
மேலும்,மக்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
இளைய சமுதாயத்தை சீரழிக்கும் போதைப்பொருட்களை ஒழித்து, இளைஞர்கள் சுயமரியாதையுடன் வாழ கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
ஆம்ஸ்ட்ராங் மூலம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சட்டக்கல்வி பயின்று வக்கீல்களாக உள்ளனர்.
அதனை முன்வைத்து, இளைஞர்களுக்கு சட்டக்கல்வி பயில தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.
மேலும், ஐ.ஏ.எஸ். அகாடமி அமைக்கப்பட்டு, ஆர்வமுள்ளவர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படும்.
பெண்களின் விருப்பத்திற்கேற்ப தையல், கணினி, ஓட்டுநர் மற்றும் வணிக மேலாண்மை பயிற்சிகள் அளிக்கப்பட்டு, வேலை வாய்ப்பு மற்றும் தொழில் தொடங்க வழிவகை செய்யப்படும்.
இந்த திட்டங்களை செயல்படுத்த எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க. கட்டுப்பாட்டில் உள்ள திரு.வி.க.நகரை மீட்டு, வருங்கால முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA