காரைக்குடி எம்.பி கார்த்தி அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
காரைக்குடி, 20 ஏப்ரல் (ஹி.ச) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி எம்.பி கார்த்தி அலுவலகத்தில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி தர்மலிங்கத்திற்கு தகவல் வந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு எம்பி அலுவலகத்தில் வந்து பார்
Election Flying Squad Conducts Raid at Karaikudi MP Karthi's Office


காரைக்குடி, 20 ஏப்ரல் (ஹி.ச)

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி எம்.பி கார்த்தி அலுவலகத்தில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி தர்மலிங்கத்திற்கு தகவல் வந்துள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு எம்பி அலுவலகத்தில் வந்து பார்த்தபோது அங்கு 13 லட்சத்து 40 ஆயிரம் பணம் இருந்தாகக் கூறப்படுகிறது.

பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருந்தபோது நிர்வாகிகள் இருவர் பணப்பையை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினர்.

அதிகாரிகள் அவர்களை விரட்டி பிடிப்பதற்காக காரை எடுத்துள்ளனர். அங்கு நின்று கொண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தல் பறக்கும் படை வாகனத்தின் சாவியை பிடுங்கிக் கொண்டு தப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஏஎஸ்பி ஆசிஸ் புனியா, தாசில்தார் ராஜா விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாவியை பறித்த பழனியப்பன் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று பணத்துடன் தப்பியவர்களை தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b