Enter your Email Address to subscribe to our newsletters

கர்நாடகா, 20 ஏப்ரல் (ஹி.ச.)
கர்நாடக மாநிலத்தில் மதுபான விலை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநில அரசு, மதுபானங்களுக்கு புதிய வரி முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, “Alcohol-in-Beverage (AIB)” என்ற புதிய வரி முறை கொண்டு வரப்பட உள்ளது. இந்த முறையில், மதுபானங்களில் உள்ள ஆல்கஹால் சதவீதத்தை அடிப்படையாக கொண்டு வரி விதிக்கப்படும்.
இந்த மாற்றத்தின் மூலம், குறைந்த விலையிலான மதுபானங்களின் விலை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
இதனால் சாதாரண மக்களே அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில், உயர்தர (பிரீமியம்) மதுபானங்களுக்கு வரி சுமை குறையக்கூடும் என்பதால், அவற்றின் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது.
மேலும், பீர் போன்ற குறைந்த ஆல்கஹால் உள்ள பானங்களின் விலையும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மதுபான விலை நிர்ணயத்தில் இருந்த கட்டுப்பாடுகளை நீக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால் நிறுவனங்களே விலையை நிர்ணயிக்கும் சூழல் உருவாகும்.
இந்த புதிய வரி முறை அமல்படுத்தப்பட்டால், கர்நாடகாவில் மதுபான விலைகளில் பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P