Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 20 ஏப்ரல் (ஹி.ச.)
மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி திசைதிருப்ப முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில் கூறியதாவது:-
பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவதில் திரிணாமுல் காங்கிரஸ் எப்போதும் முன்னிலையில் உள்ளது.
மக்களவையிலும், மாநிலங்களிலும் அதிகமான பெண் எம்.பி.க்களை கொண்டுள்ளோம்.
எனவே, மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது என்ற கேள்வியே இல்லை.
ஆனால், தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்திற்கே நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இந்த நிலையில், பிரதமர் மோடி நாட்டை திசைதிருப்ப முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA