Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 20 ஏப்ரல் (ஹி.ச)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று இரண்டாவது முறையாக தமிழகம் வருகிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணிக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதற்கு முன் சென்னை உள்ளிட்ட வட மற்றும் மத்திய மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த அவர், இப்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் பகுதிகளை குறிவைத்து பயணம் மேற்கொள்கிறார்.
இன்றைய பயணத்தில் குளச்சல், நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
இந்த பகுதிகள் தேர்தலில் முக்கியமான போட்டி நிலவுகின்ற மையங்களாகக் கருதப்படுகின்றன.
பிரச்சாரத்தின் போது மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்து, மாநில உரிமைகள், தமிழ் மொழி பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தியின் இந்த வருகை, தென் தமிழ்நாட்டில் திமுக–காங்கிரஸ் கூட்டணிக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam