வேட்புமனு சர்ச்சை - வருமான விவரம் மறைத்ததாக சுந்தர் சி மீது நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச) மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் இயக்குனர் சுந்தர் சி மீது, வேட்புமனுவில் வருமான விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை, அதே
Sundar


சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச)

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் இயக்குனர் சுந்தர் சி மீது, வேட்புமனுவில் வருமான விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை, அதே தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஷகிலா தாக்கல் செய்துள்ளார். மனுவில், சுந்தர் சி பங்குதாரராக உள்ள அவ்னி டெலி மீடியா, அவ்னி மூவீஸ் மற்றும் அவ்னி சினிமாக்ஸ் நிறுவனங்களின் வருமானம் மற்றும் சொத்து விவரங்கள் வேட்புமனுவில் குறிப்பிடப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் வருமான வரித்துறையினரிடம் விரிவான விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

அதேபோல், வேட்புமனுக்களில் தகவல் மறைத்தது தொடர்பான பிற வழக்குகளும் இதே நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ