அரூர் பகுதியில் ரூ.22 லட்சம் ரொக்கம் பறிமுதல்
தருமபுரி, 20 ஏப்ரல் (ஹி.ச.) தருமபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் அருகே இருக்கக்கூடிய பெட்ரோல் பங்க் முன்பு சுமார் 20க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அவ்வழியாக சென்ற தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும
Money Seizure


தருமபுரி, 20 ஏப்ரல் (ஹி.ச.)

தருமபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் அருகே இருக்கக்கூடிய பெட்ரோல் பங்க் முன்பு சுமார் 20க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அவ்வழியாக சென்ற தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.

பின்பு அங்கே கேட்பாராற்று இருந்த இருசக்கர வாகனத்தை, சந்தேகம் அடைந்த தேர்தல் பறக்கும் படை குழுவினர் சோதனை செய்ததில் ஸ்கூட்டி டிக்கியில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாகவும், அதில் 22 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை குழுவினர் அரூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான செம்மலையிடம் ஒப்படைத்தனர்.

மேலும் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சந்தேகத்திற்கு இடமான பகுதியில் பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என, இருள் சூழ்ந்த விவசாய தோட்டங்களிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

பின்பு அருகே இருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு பணம் ஏதும் கிடைக்காததால் திரும்பிச் சென்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN