த.வெ.க விஜய் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல்
சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.) தவெக தலைவர் விஜய் தான் திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 20, 2026 அன்று ரோட் ஷோ சென்றபோது அந்தோணியர் ஆலையத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார். அப்போது அவர் கட்சி துண்டு அணிந்திருந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக
TVK Vijay CPM Shanmugam


சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.)

தவெக தலைவர் விஜய் தான் திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 20, 2026 அன்று ரோட் ஷோ சென்றபோது அந்தோணியர் ஆலையத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்.

அப்போது அவர் கட்சி துண்டு அணிந்திருந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெ.சண்முகம் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 20, 2026 அன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இந்த நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 19, 2026 அன்று ரோட் ஷோ சென்றார். அப்போது சர்ச், கோவில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுதலங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.

குறிப்பாக அவர் திருச்சி வயர்லஸ் சாலையில் உள்ள அந்தோணியர் ஆலயத்தில் மண்டியிட்டபடி சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டது தொண்டர்களின் கவனத்தை ஈர்த்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அதன் பின்னர் மசூதி மற்றும் கோவிலுக்கு சென்றார். இந்த நிலையில் அவர் கட்சி துண்டு அணிந்து வழிபாட்டு தலங்களுக்கு சென்ற விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் புகார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிமுறைகளின் படி மத வழிபாட்டு தலங்களில் கட்சி அடையாள சின்னத்துடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது என்றும் அதனை தவெக தலைவர் விஜய் மீறியுள்ளதாகவும் பெ.சண்முகம் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Hindusthan Samachar / ANANDHAN