Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 20 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை (ஏப்ரல் 21) மாலை தேர்தல் பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக நிறைவடைய உள்ளது.
இதனால், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் இன்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய தலைவர்கள் பலரும் ஒரே நாளில் பல தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கோருகின்றனர்.
வீடு தோறும் பிரச்சாரம், வாகன பேரணி, தெருமுனைப் பேச்சு உள்ளிட்ட பல்வேறு முறைகளில் வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கடைசி நாளை முன்னிட்டு இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட வாக்காளர்களை கவரும் வகையில் கட்சிகள் பல்வேறு திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை வலியுறுத்தி வருகின்றன.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, பிரச்சாரம் நிறைவடைந்த பின் 48 மணி நேர ‘மவுன காலம்’
(silent period) அமலில் வரும்.
இந்த காலப்பகுதியில் எந்தவொரு தேர்தல் பிரச்சாரமும் நடத்த அனுமதி இல்லை.
இதனை முன்னிட்டு, தமிழகத்தில் தேர்தல் களம் இன்று மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam