Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித், திரு.வி.க.நகர் தொகுதியில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்-ஐ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து, பல்வேறு கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவுடன் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவி ஆவார்.
கணவர் கொலை செய்யப்பட்ட பின்னர், அரசியல் அரங்கில் காலடி எடுத்து வைத்துள்ள அவர், தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார்.
இதற்கிடையில், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சில தரப்பினரும், குறிப்பாக தலித் இயக்கங்களுடன் தொடர்புடையவர்களும், அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பா.ரஞ்சித்தின் நேரடி ஆதரவு தேர்தல் சூழலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆதரவு, தேர்தல் போட்டி கடுமையாக நிலவும் திரு.வி.க.நகர் தொகுதியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P