அண்ணா நகர் டவர் பூங்காவில் வாக்கிங் சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர்
சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள டவர் பூங்காவில் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டபடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பூங்காவில் இருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து, திமுக வேட்பாளர் சி
முதலமைச்சர்


சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள டவர் பூங்காவில் இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டபடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பூங்காவில் இருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து, திமுக வேட்பாளர் சிற்றரசுவுக்கு ஆதரவு கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது, அரசின் நலத்திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்கு கிடைக்க திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முதலமைச்சர் வந்த தகவல் பரவியதும், அண்ணா நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் டவர் பூங்காவுக்கு திரண்டனர்.

பலர் அவருடன் கைகுலுக்கி வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்வில் மத்திய சென்னை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வடசென்னை திமுக எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் முதலமைச்சரின் இந்த வாக்கிங்-பிரச்சாரம் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P