Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சார்பில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம், தேர்தலுக்கான சிறப்பு மேற்பார்வையாளர் பிரதாப் சிங் தலைமையில் ஆயக்கர் பவானி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தேர்தல் நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை மற்றும் மாவட்ட செயலாளர் பாலகங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை நிறைவடைய உள்ள நிலையில், வரும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, தேர்தல் ஒழுங்குகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Hindusthan Samachar / GOKILA arumugam