நா.த.க வேட்பாளர் அதிரடி கைது - அன்புமணி கூட்டத்தில் பரபரப்பு
சேலம், 20 ஏப்ரல் (ஹி.ச.) சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி பகுதியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேச்சேரியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வித்யா வீரப்பன் தனது ஆதரவாளர்களுடன் கொடி ஏந்தி அங்கு நுழைய முயன்றதால் திடீர் பதற
வித்யா வீரப்பன்


சேலம், 20 ஏப்ரல் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி பகுதியில்,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேச்சேரியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, வித்யா வீரப்பன் தனது ஆதரவாளர்களுடன் கொடி ஏந்தி அங்கு நுழைய முயன்றதால் திடீர் பதற்றம் ஏற்பட்டது.

அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் வெளியேற மறுத்ததால், போலீசார் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இதனால் ஆதரவாளர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், வித்யா வீரப்பன் சாலையில் அமர்ந்து அழுதபடியே போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சிந்தாமணி முதல் கோவிந்தபாடி வரை இருசக்கர வாகன பேரணி நடத்த முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தோம்.

ஆனால் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் நடப்பதால் எங்களை தடுத்து நிறுத்தினர். நீண்ட நேரம் காத்திருந்தும் அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் அவரிடம் நேரில் சென்று விளக்கம் கேட்க முயன்றேன், என்றார்.

மேலும், “என்னை மட்டும் தொடர்ந்து சோதனை செய்வது அசிங்கமாக உள்ளது. மற்ற வேட்பாளர்களிடம் இப்படியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை, என்றும் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில், சரியான அனுமதி இல்லாததால் தான் அவரை தடுத்து நிறுத்தப்பட்டது,

என விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தையடுத்து, வித்யா வீரப்பன் கைது செய்யப்பட்டார்.

இதனால் மேச்சேரி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam