செய்யாறு அருகே த.வெ.க வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
செய்யாறு, 20 ஏப்ரல் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அனக்காவூர் இந்திரா நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் தவெக திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயக
உதயகுமார்


செய்யாறு, 20 ஏப்ரல் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அனக்காவூர் இந்திரா நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

அப்பகுதியில் வசித்து வரும் தவெக திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார், வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக உள்ளார். இவரது வீட்டை குறிவைத்து மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் வீட்டு முன்பகுதியில் தீப்பற்றி சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் நடந்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்த காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டது.

மேலும், இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களை கண்டறிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தேர்தல் சூழலில் நடந்துள்ளதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இதே வேட்பாளர் வந்தவாசி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது மாற்றுக் கட்சியை சேர்ந்து தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P