சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்
சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச) சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷுக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்
பிரசாரம்


சென்னை, 20 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷுக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தின் போது, பொதுமக்களுடன் நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் உற்சாகமாக திரண்ட நிலையில், கட்சி தொண்டர்கள் முழக்கங்களுடன் வரவேற்பளித்தனர்.

பிரச்சாரத்தின் போது பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக அரசு கடந்த ஆண்டுகளில் நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி, தொடர்ந்து வளர்ச்சி பணிகள் நடைபெற திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக, கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்தார்.

மேலும், தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய தலைவர்கள் தொடர்ந்து களமிறங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.

Hindusthan Samachar / GOKILA arumugam