செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று விஜய்–சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை
தமிழ்நாடு, 20 ஏப்ரல் (ஹி.ச.) தீவிர சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று (20ஆம் தேதி) விசாரணைக்கு வரவுள்ளது. விவாகரத்து
விஜய் - சங்கீதா


தமிழ்நாடு, 20 ஏப்ரல் (ஹி.ச.)

தீவிர சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று

(20ஆம் தேதி) விசாரணைக்கு வரவுள்ளது.

விவாகரத்து கோரி சங்கீதா தாக்கல் செய்த மனுவின் முதற்கட்ட விசாரணைக்காக, இருவரும் ஆஜராகுமாறு நீதிமன்றம் முன்னதாகவே சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், இரு தரப்பு வழக்கறிஞர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பரஸ்பரம் பிரிவதற்கான சுமூக முடிவை இருவரும் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஜீவனாம்சம், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சொத்து பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் முன்கூட்டியே ஆலோசித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் பிரச்சார பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், விஜய் மற்றும் சங்கீதா இருவரும் காணொளி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான தேவையான ஆவணங்கள் வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் தீர்மானிக்க உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam