தமிழர்கள் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் இடம் சரணடைய மாட்டார்கள் - ராகுல் காந்தி
கன்னியாகுமரி, 20 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று தமிழகம் வருகை தந்துள்ள காங்கிரஸ் எம். பி ராகுல் காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் லட்சுமிபு
Rahul Gandhi


கன்னியாகுமரி, 20 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று தமிழகம் வருகை தந்துள்ள காங்கிரஸ் எம். பி ராகுல் காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் லட்சுமிபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது:

அனைத்து மொழிக்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது.

ஒரு மொழி, ஒரு கலாசாரம் என்ற ஒற்றை அரசியலுக்குள் நாட்டை பாஜ அடக்க பார்க்கிறது.

அந்தந்த மாநில மக்கள் தான், அந்தந்த மாநிலங்களை ஆள வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

டில்லியில் இருந்து தமிழகத்தை பாஜ ஆள நினைக்கிறது. தனிப்பட்ட மொழி, வரலாறு, பண்பாடு, கலாசாரம், உரிமைகள் சிதைக்கப்படக்கூடாது. ஒவ்வொரு மொழியும் பொக்கிஷம்.

அரசியல் சாசனம் சொல்வதை பாஜ ஏற்றுக் கொள்வதில்லை, பாஜ, ஆர்எஸ்எஸ்ஐ எதிர்த்து போராடுவதை நமது அரசியல் களம்.

அமைதியாக இருந்த மணிப்பூரை அமைதி இழக்க செய்தது பாஜ தான். அனைத்து மாநிலங்களும் ஒரே வகையிலான முக்கியத்துவம் பெற வேண்டும்.

மணிப்பூரில் பாஜ என்ன செய்தது. அமைதியான மாநிலத்தில் இன்னும் உள்நாட்டு போர் நீடிக்கிறது. அமைதியை இழந்து மணிப்பூர் மாநிலம் சின்னா பின்னாமா ஆகியதற்கு காரணம் பாஜ தான். தமிழ் மொழி பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு உடையது, மற்ற மாநிலங்களுக்கும் அதே வரலாறு உள்ளது.

தமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும். இப்போதைய அதிமுக வெற்றுக்கூடாரமாக மாறிவிட்டது. தமிழகத்திற்குள் பாஜ நுழைவதற்கான கருவியாக உள்ளது.

இபிஎஸ்ஐ ஆட்டுவிக்க பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். அதிமுக தலைவர்கள் பாஜவிடம் சரணடைந்து விட்டனர்.

தமிழகத்தின் வளர்ச்சியில் அதிமுகவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அதிமுக தலைவர்கள் ஒரு காலத்தில் தமிழகத்தின் பிரதிநிதிகளாக இருந்தனர். அதிமுக தலைவர்கள் தங்களது ஊழல் காரணமாக பாஜக பிடியின் சிக்கி உள்ளனர்.

தமிழ் மொழியை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழர்கள் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் இடம் சரணடைய மாட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.

வாய்ப்புள்ள இடத்தில் அதிகாரத்தை கைப்பற்ற பாஜ முயற்சிக்கிறது. மாநில பிரதிநிதித்துவத்தை குறைக்க எப்போதும் விடமாட்டோம். தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடித்தோம். பாஜ செய்வது தேச விரோத செயல் என்பதால் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடித்தோம்.

சமூகநீதியில் கால் பதித்துள்ளது தமிழகம். தமிழகத்தில் தான் மதிய உணவு திட்டம், பெண்கள் பாதுகாப்பு சட்டம் உள்ளது.

நாட்டிற்கே வளர்ச்சி பாதையை காட்டிய மாநிலம் தமிழகம். பள்ளி குழந்தைகளுக்கு மாபெரும் திட்டத்தை தந்தது திமுக அரசு. திமுக, காங்கிரஸ் கூட்டணியின் நலத்திட்ட பணிகள் தொடரும்.

காலை உணவு என்ற தலைசிறந்த திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ், கலாசாரம், பண்பாட்டை பாதுகாக்க நமது கூட்டணி உறுதியாக உள்ளது.

இவ்வாறு ராகுல் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b