பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு குரல் கொடுக்கக் கூடியவர் சௌமியா - அன்புமணி இறுதிக் கட்ட பிரச்சாரம்
தருமபுரி, 21 ஏப்ரல் (ஹி.ச.) தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியாவை ஆதரித்து கட்சி தலைவர் அன்புமணி இறுதி கட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். மதிக்கோன் பாளையம் தொடங்கி அன்னசாகரம், அரசு மருத்துவக் கல்லூரி, நான்கு ரோ
Anbumani's Final-Phase Campaign


தருமபுரி, 21 ஏப்ரல் (ஹி.ச.)

தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியாவை ஆதரித்து கட்சி தலைவர் அன்புமணி இறுதி கட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

மதிக்கோன் பாளையம் தொடங்கி அன்னசாகரம், அரசு மருத்துவக் கல்லூரி, நான்கு ரோடு, குமாரசாமிபேட்டை ஆகிய பகுதிகளில் வானகத்தின் சென்றார். இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்காக திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி, கையில் மாம்பழத்தை வைத்துக் கொண்டு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கு நடந்தாலும் அங்கே சென்று குரல் கொடுக்கக் கூடியவர் சௌமியா. இவரை உங்கள் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால் தருமபுரி மாவட்டமே முன்னேறும். தொழில் நிறுவனங்கள் எதுவும் இல்லாமல் தருமபுரி மாவட்டம் பின்தங்கியுள்ளது.

சௌமியா வெற்றி பெற்றதும் சிப்காட் தொழிற்சாலை கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பார். தருமபுரி மாவட்டத்திற்கு நீர் பாசன திட்டங்களை கொண்டு வருவார்.

தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை கொண்டு வந்து விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடிநீர் பிரச்சினையை சரி செய்வார். மொரப்பூர் ரயில் திட்டம் விரைவாக செயல்பாட்டுக்கு வர நடவடிக்கை மேற்கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b