Enter your Email Address to subscribe to our newsletters

குண்டூர், 21 ஏப்ரல் (ஹி.ச.)
ஒய்எஸ்ஆர்சிபி மூத்த தலைவர் அம்பதி ராம்பாபு
மீது மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது இல்லத்தின் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரி, குண்டூர் கலெக்டரேட் முன்பு அம்பதி ராம்பாபு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆனால், இந்த போராட்டம் முன் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதுடன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து நகரம்பாளையம் போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததுடன், அனுமதி இன்றி பொதுமக்கள் இடத்தில் போராட்டம் நடத்தியதாக அம்பதி ராம்பாபு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே சத்தெனப்பள்ளி லக்கி டிரா விவகாரம் மற்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து கூறிய சர்ச்சையான கருத்துகள் தொடர்பான வழக்குகளில், அம்பதி ராம்பாபு 17 நாட்கள் ரிமாண்ட் காவலில் இருந்து பின்னர் ஜாமினில் வெளியேறியிருந்தார்.
இந்நிலையில், வெளியே வந்த சில நாட்களிலேயே மீண்டும் விதிமுறைகள் மீறியதாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்குக்கு அவர் எவ்வாறு பதிலளிப்பார் என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது...
Hindusthan Samachar / M.DEEPAK RAJA