Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக நடைபெற்ற இந்த ரோடு ஷோ, வில்லிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார முக்கிய பகுதிகள் வழியாக நடைபெற்றது.
திறந்த வாகனத்தில் பயணித்த முதல்வர், வழியெங்கும் திரண்ட பொதுமக்களை கைகூப்பி வரவேற்று வாக்கு கோரினார்.
ரோடு ஷோவில் கட்சித் தொண்டர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் உள்ளிட்டோர் பெருமளவில் பங்கேற்றனர்.
பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சாலையோரங்களில் திரண்டு முதல்வருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பேச்சின்போது, மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து எடுத்துரைத்த முதல்வர், அவற்றை தொடர்வதற்காக மீண்டும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளில் அனைவரும் கட்டாயம் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பை வேகப்படுத்தி வருகின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam