Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 21 ஏப்ரல் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் வாச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டனார்பட்டி பகுதியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. முன்புற வராண்டாவில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தால் மூன்றுக்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்தன. மேலும் சில கட்டடங்கள் முற்றிலும் தரைமட்டமாகின.
இந்த கட்டணார்பட்டி வனஜா பட்டாசு ஆலை வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளரான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி மற்றும் அவரது கணவர் முத்துமாணிக்கம் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நான்கு தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் முத்துமாணிக்கம் இன்று (ஏப்ரல் 21 ஆம் தேதி) விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
Hindusthan Samachar / ANANDHAN