Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.)
சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.ஏப்ரல் மாத தொடகக்த்தில் இருந்தே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்தது.
அந்த வகையில் நேற்று நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300 க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றையே விலையே விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி 22 காரட் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.14,300 க்கும், ஒரு சவரன் ரூ.1,14,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் 18 காரட் தங்கம் விலை மட்டும் கணிசமாக குறைந்துள்ளது. அதன் படி, கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,920க்கும் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P