Enter your Email Address to subscribe to our newsletters

அகமதாபாத் , 21 ஏப்ரல் (ஹி.ச.)
ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றி பெற்றது.
அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு குவிண்டன் டி காக் (13) மற்றும் தனிஷ் மலிவார் (2) விரைவில் அவுட்டானதால் தொடக்கத்தில் சற்றுத் தடுமாற்றம் ஏற்பட்டது.
ஆனால் அடுத்து களமிறங்கிய நமன் திர் 32 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.
பின்னர் வந்த திலக் வர்மா அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் சதம் அடித்து 101 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.
200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.
சாய் சுதர்சன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். கேப்டன் சுப்மன் கில் 14 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து விளையாடியவர்களில் வாஷிங்டன் சுந்தர் (26) மற்றும் ஷாருக் கான் (17) மட்டுமே ஓரளவு எதிர்ப்பு காட்டினர்.
மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டானதால், குஜராத் அணி சுருண்டது.
இறுதியில், குஜராத் அணி 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டானதால், மும்பை அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA