35 மீட்டர் உயரம் வளரும் இந்திய பாதாம் மரம்
சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.) இந்த மரம் 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது, கிளைகள் ஒன்றன்மேல் ஒன்றாக சீராக அடுக்கியது போல் குடை வடிவத்தில் அழகாக இருக்கும். இது ஒரு இலையுதிர் மரமாகும், வருடத்தில் இருமுறை இலைகளை உதிர்த்துவிடும். இலைகள் கரும்பச்சை ந
வ


சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.)

இந்த மரம் 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது, கிளைகள் ஒன்றன்மேல் ஒன்றாக சீராக அடுக்கியது போல் குடை வடிவத்தில் அழகாக இருக்கும்.

இது ஒரு இலையுதிர் மரமாகும், வருடத்தில் இருமுறை இலைகளை உதிர்த்துவிடும்.

இலைகள் கரும்பச்சை நிறத்தில் பெரிய இலைகளாக இருக்கும், நாளாக நாளாக மஞ்சள் நிறத்திற்கு மாறி பின் சிவப்பு நிறமாகி உதிர்ந்துவிடும்.

மரத்தைச் சுற்றி காய்ந்த இலைகள் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.

இது Bisexual flower என்று சொல்லக்கூடிய ஆண் மலரும் பெண் மலரும் ஒருங்கே ஒரே மரத்தில் பூக்கக்கூடிய மரவகையைச் சார்ந்தது.

இதனுடைய பழம் சிறியதாக கூர்மையான முட்டை வடிவத்தில் இருக்கும்.

பச்சை நிறத்தில் காயாக இருந்து மஞ்சள் நிறத்தில் நார் நிறைந்த ஓட்டின் மீது நல்ல சதை கொண்ட பழமாக மாறி கீழே விழுந்துவிடும் அல்லது அதுவே சிவப்பு நிறமாகியும் கீழே விழும்.

விழுந்த பழத்தின் மேலே உள்ள சதைப்பகுதி காய்ந்து அதனைக் கொட்டினால் உள்ளே ஒரு பருப்பு இருக்கும், அது தான் உண்மையான பாதாம் பருப்பை போல ருசியிருக்கும், அதனால் தான் இந்திய பாதாம் என்ற பெயர் வந்தது.

ஒரு சில மரங்களின் பழம் பச்சையாக இருந்து நேரடியாக காவி நிறத்தில் மாறி காய்ந்து கீழே விழுந்துவிடும்.

Hindusthan Samachar / Durai.J