Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 21 ஏப்ரல் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து, சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டு பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர்,
சாத்தான்குளத்தில் ஜெயக்குமார் மற்றும் பெனிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை மூடிமறைக்க முயன்றவர் எடப்பாடி பழனிசாமி.
அந்த நேரத்தில் நாங்கள் ஒன்றுபட்டு போராடினோம் என்று தெரிவித்தார்.
மேலும், “அந்தக் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்றால் வழக்கு தொடரப்படும் என்று ஸ்டாலின் கூறிய பிறகே, அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதுவரை குற்றச்சாட்டு உள்ளவர்களை பாதுகாக்கப்பட்டது என்றும் கூறினார்.
பொள்ளாச்சி பெண்கள் மீதான குற்றச்சம்பவம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவங்களையும் குறிப்பிட்டு, அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் செயல்பாட்டை அவர் விமர்சித்தார்.
காவல்துறை தனது கட்டுப்பாட்டில் இருந்தும், சம்பவங்கள் குறித்து ‘தொலைக்காட்சியில் பார்த்தே தெரிந்தது’ என்று கூறியவர் எடப்பாடி பழனிசாமி.
இப்படிப்பட்டவர்களின் செயல்பாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கனிமொழி பேசினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam