Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 21 ஏப்ரல் (ஹி.ச.)
கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சென்னை மற்றும் திருச்சி நகரங்களைப் போல திட்டமிட்ட நகர வளர்ச்சியை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.
அதன்படி, கோவையில் புதிய புறநகர் பகுதிகள் உருவாக்கப்படுவதுடன், சாலைகள், குடிநீர், கழிவுநீர் வடிகால், மழைநீர் மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
மேலும், நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் அமைத்தல் போன்ற பணிகளும் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில் வளாகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும் வலுப்படுத்தப்பட உள்ளன.
கோவை வளர்ச்சிக்காக மொத்தம் 26 புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகவும், அவை கட்டுப்படுத்தப்பட்ட காலக்கெடுவில் அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் கோவை சர்வதேச தரத்திற்கு இணையான நகரமாக உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam