Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.)
கோயம்பேடு காய்கனி அங்காடியில் கடைகள் ஒதுக்கீடு தொடர்பான டெண்டர் விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றம் முன்பு உறுதி அளித்தது.
தருமபுரியைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தக்குமார் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் 72 கடைகள் ஒதுக்கீடு தொடர்பான டெண்டர் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும், புதிய அரசு பொறுப்பேற்கும் வரை ஏலத்தை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.
Hindusthan Samachar / P YUVARAJ