Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 ஏப்ரல் (ஹி.ச.)
குடிமைப் பணியாளர்கள் பொது சேவை மற்றும் சிறப்புக்கான தங்கள் அர்ப்பணிப்பை புதுப்பித்துக் கொள்ளும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 21-ஆம் தேதி குடிமைப் பணியாளர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி 18-வது குடிமைப் பணியாளர்கள் தினத்தையொட்டி இன்று அனைத்து குடிமைப் பணியாளர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து இன்று எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,
குடிமைப் பணியாளர்கள் தினத்தில் அனைத்து குடிமைப் பணியாளர்களுக்கும் வாழ்த்துகள். நல்லாட்சி மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதற்கான உறுதியை மேலும் வலுப்படுத்த இந்த நாள் ஒரு வாய்ப்பு.
அடிமட்ட நிலை முதல் கொள்கை வகுப்பு வரை, குடிமைப் பணியாளர்களின் முயற்சிகள் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையைத் தொட்டு, இந்தியாவின் முன்னேற்றத்துக்குப் பங்களிக்கின்றன. நமது குடிமைப் பணியாளர்கள் கடமையின் மிக உயர்ந்த தரத்தைப் பேணி, சிறப்புடன், கருணையுடன், புதுமையுடன் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும்
தேச சேவையே ‘வளர்ந்த இந்தியாவின்’ அடித்தளம். குடிமைப் பணிகள் தினம் என்ற இந்தப் பெருமைமிகு நாளில், கடைசி வரிசையில் நிற்கும் நபரையும் வளர்ச்சியின் முக்கிய நீரோட்டத்துடன் இணைத்து, அதிகாரம் பெற்ற, வளமான, உணர்வுப்பூர்வமான இந்தியாவைக் கட்டமைக்கும் உறுதியை நாம் மீண்டும் உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b