குடிமைப் பணியாளர்கள் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து
புதுடெல்லி, 21 ஏப்ரல் ( ஹி.ச) குடிமைப் பணியாளர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. பொதுச் சேவை மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்கான தங்கள் உறுதிப்பாட்டை குடிமைப் பணியாளர்கள் புதுப்பித்துக் கொள்ளும் நாளாக இந்த நாள் கடைப்பிடி
குடிமைப் பணியாளர்கள் தினத்தை முன்னிட்டு  குடியரசுத் தலைவர் திரௌபதி  முர்மு வாழ்த்து


புதுடெல்லி, 21 ஏப்ரல் ( ஹி.ச)

குடிமைப் பணியாளர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. பொதுச் சேவை மற்றும் சிறப்பான செயல்பாட்டிற்கான தங்கள் உறுதிப்பாட்டை குடிமைப் பணியாளர்கள் புதுப்பித்துக் கொள்ளும் நாளாக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்று 18-வது குடிமைப் பணியாளர்கள் தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டின் அனைத்து குடிமைப் பணியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்ட பதிவில் அவர் கூறியிருப்பதாவது,

குடிமைப் பணியாளர்கள் தினத்தில் அனைத்து குடிமைப் பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களின் அர்ப்பணிப்பு, பொறுப்புள்ள ஆட்சி நிர்வாகத்தை தொடர்ந்து வலுப்படுத்துவதுடன், பொது நிறுவனங்களையும் பலப்படுத்துகிறது.

புதுமையான, எதிர்கால நோக்குடைய, மக்கள் மையக் கொள்கைகளை வகுப்பது முதல் அவற்றை களத்தில் திறம்பட செயல்படுத்துவது வரை, உங்கள் பணி கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

புதிய அபிலாஷைகளுடன் பாரதம் முன்னேறும் இவ்வேளையில், உங்களின் நேர்மையும் பரிவும் இடைவெளிகளைக் குறைப்பதிலும், உள்ளடக்கத்தை வளர்ப்பதிலும், அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும்.

பொதுச் சேவையின் உயர்ந்த தரங்களைத் தொடர்ந்து நிலைநாட்டி, மேலும் சமமான, முற்போக்கான தேசத்தைக் கட்டமைப்பதில் நீங்கள் அர்த்தமுள்ள பங்களிப்பைத் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b