மணிப்பூர் குண்டுவெடிப்பு எதிரொலி- இம்பாலில் தொடரும் போராட்டம்
இம்பால், 21 ஏப்ரல் (ஹி.ச) மணிப்பூரில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி ட்ரோங்லாவோபியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இரு சிறார்கள் உயிரிழந்ததைக் கண்டித்து, கெய்ஷாம்தாங் பகுதியில் இன்றும் (ஏப்ரல் 21-ம் தேதி) போராட்டங்கள் நீடித்தன. மொய்ராங்கின் ட்ரோங்லாவ
Protests Continue in Imphal


இம்பால், 21 ஏப்ரல் (ஹி.ச)

மணிப்பூரில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி ட்ரோங்லாவோபியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இரு சிறார்கள் உயிரிழந்ததைக் கண்டித்து, கெய்ஷாம்தாங் பகுதியில் இன்றும்

(ஏப்ரல் 21-ம் தேதி) போராட்டங்கள் நீடித்தன.

மொய்ராங்கின் ட்ரோங்லாவோபி அவாங் லெய்கை பகுதியில் நடந்த இந்தத் தாக்குதல், நீதி கோரி பொதுமக்களின் எழுச்சிக்கு வழிவகுத்துள்ளது.

பல மாவட்டங்களுக்கு விரிவடைந்துள்ள இந்தப் போராட்டம் காரணமாக, ஐந்து நாள் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டு மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

மணிப்பூர் முதல்வர் யும்னம் கேம்சந்த் சிங்கிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் போராட்டக்காரர்கள் தாக்குதலுக்கு குக்கி போராளிகளே காரணம் எனக் குற்றம்சாட்டினர்.

சந்தேகத்திற்குரிய போராளிகள் அதிகாலை 1:00 மணியளவில் அவர்களது வீட்டின் மீது குண்டு வீசியதில், ஐந்து வயது சிறுவனும், ஐந்து மாத பெண் குழந்தையுமான உடன்பிறப்புகள் உயிரிழந்தனர். உறங்கிக் கொண்டிருந்த அவர்களது தாயாரும் காயமடைந்தார்.

குற்றவாளிகளை ஏப்ரல் 25-க்குள் கைது செய்ய வேண்டும் என மெய்ரா பைபி லுப் அமைப்பு வலியுறுத்தி, நடவடிக்கைக்கான கோரிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் அழைப்பைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட மாநிலம் தழுவிய முழு அடைப்பால், முக்கிய மாவட்டங்களில் சந்தைகள் மூடப்பட்டு, வணிக வாகனங்கள் சாலைகளில் இயங்காமல் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மோதல் வெடித்ததை அடுத்து அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b