Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு , 21 ஏப்ரல் (ஹி.ச.)
ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியருமான கந்தசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
எட்டு சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆலோசனையில் ஈடுபட்டு
வாக்கு சாவடி பணிக்கு செல்லும் அலுவலர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது
நாளை 3-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 2389 வாக்குச்சாவடி மையங்களை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
மாவட்ட முழுவதும் 94 சதவீதம் பூத் ஸ்லீப் வழங்கப்பட்டுள்ளது. இன்று 6:00 மணிக்கு பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.
வெளி மாவட்டத்தில் உள்ளவர்கள் வெளியேற வேண்டும், மீறி பிரச்சாரம் மற்றும் தங்கும் விடுதியில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இருந்தால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
எட்டு சட்டமன்றத்திற்கு தேவையான பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர் கூடுதல் போலீசார் தேவை இருந்ததால் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் தேர்தல் விதியை பின்பற்ற வேண்டும்.
வாக்குப்பதிவு அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் மூலம் செயல்படும் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN