குன்னம் தொகுதியில் ரூ.2.49 கோடி பணம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை
பெரம்பலூர், 21 ஏப்ரல் (ஹி.ச.) பெரம்பலூர் அருகே வாகன சோதனையின் போது திமுகவினர் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க எடுத்துச் சென்றபோது வாகன சோதனையின்போது 2 கோடியே 49 லட்சத்தி 95 ஆயிரம் பணம் பிடிபட்டது. பெரம்பலூர் மாவட்டம்
Money Seizure


பெரம்பலூர், 21 ஏப்ரல் (ஹி.ச.)

பெரம்பலூர் அருகே வாகன சோதனையின் போது திமுகவினர் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க எடுத்துச் சென்றபோது வாகன சோதனையின்போது 2 கோடியே 49 லட்சத்தி 95 ஆயிரம் பணம் பிடிபட்டது.

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் அருகே, இரவு வட்டாட்சியர் பழனி செல்வம் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஜெயராமன் என்பவர் ஓட்டி வந்த shift desier காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூபாய் 2,49,95,000/- ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான மு.அனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் ஜெயராமணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக அமைச்சர் போட்டியிடும் தொகுதியில் சுமார் 2.49 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

குன்னம் தொகுதியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் போட்டியிடும் நிலையில், 2.49 கோடி ரூபாய் பணம் திமுக நிர்வாகி காரில் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN