ராதாபுரம் தொகுதியில் பணப்பட்டுவாடா - வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய வைத்திருந்த ரூ.5 லட்சம் சிக்கியது
நெல்லை, 21 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா? என தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவ
Money Seizure


நெல்லை, 21 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.

இதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா? என தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வள்ளியூர் கன்கார்டியா பள்ளி அருகே சிலர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நிலையான கண்காணிப்பு குழு அதிகாரியான வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாப்பா தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் சென்று அந்த பகுதியை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த பட்டர்புரத்தை சேர்ந்த அருள் முத்துக்குமார் என்பவரை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

இவர்கள் இருவரும் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் என்பது கூறப்படுகிறது

அவர் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததும் தெரியவந்தது.

வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்ததாக ரூ.5 லட்சத்தை அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பறக்கும் படையினர் அளித்த புகாரில் வள்ளியூர் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Hindusthan Samachar / ANANDHAN