தேர்தலில் தோற்ற பின் மோடி, அமித்ஷா காலில் திமுக விழும் - தவெக தலைவர் விஜய்
சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை, நந்தனம் மைதானத்தில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக பிரச்சார நிகழ்வில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் விஜய் பேசியதாவது: மிக மிக முக்கியமான நேரத்தில் இருக்கிறோம். திமுக ஆட்சியை வீ
TVK Leader Vijay


சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை, நந்தனம் மைதானத்தில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றி கழக பிரச்சார நிகழ்வில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் விஜய் பேசியதாவது:

மிக மிக முக்கியமான நேரத்தில் இருக்கிறோம். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப போகும் தேர்தலின் கடைசி பிரசாரம். ஸ்டாலின் சாரை வீட்டுக்கு அனுப்பப்போகும் அந்த தேர்தலின் கடைசி பிரசாரம். இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை, மக்களை சுத்தமாக கண்டுகொள்ளாத ஆட்சியை, தலைவரை, கட்சியை வீட்டுக்கு அனுப்பப்போகும் தேர்தலின் கடைசி பிரசாரம்.இப்படிப்பட்டவங்களை வீட்டுக்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்புவார்கள்?

எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள். பொய் சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டு அவரின் வாழ்க்கையை உயர்த்தினார்.ம க்களின் வாழ்க்கையை எப்படி உயர்த்தினார் தெரியுமா? வீட்டுவரி, குடிநீர்வரி, தொழில் வரி, விலைவாசி உயர்த்திவிட்டார். குப்பைக்கும் வரி போட்டார். மக்களின் கஷ்டங்களை மட்டும் உயர்த்திவைத்து உள்ளார்.

இன்னும் பல படி சென்று, தமிழகத்தில் எந்த அரசும் வாங்காத கடனை உயர்த்தி வைத்துள்ளார். 5.5 லட்சம் கடன் கோடி வாங்கி உள்ளார். இத்தனை கோடி கடன் வாங்கி எவ்வளவு செய்திருக்கலாம். இளைஞர்களின் கல்விக்கடனை ரத்து செய்திருக்கலாம்.

விக்கிரவாண்டியில் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜ என்று சொன்னோம். அதில் இருந்து மாறவில்லை.ஹிந்து முஸ்லிம், கிறிஸ்தவர், என்பது அவர்களின் வழிபாட்டு முறை. வாழ்க்கைமுறையில் மட்டும் தான். ஆனால், தமிழகம் ஒற்றுமை என வந்துவிட்டால் நம்மிடம் யாரும் வாலாட்ட முடியாது. நம்முடைய நல்லிணக்கத்தை யாராலும் நாசம் செய்ய முடியாது என்று கூறினோம்.அன்றையில் இருந்து அந்த நிலைப்பாட்டில் இருந்து ஒரு இஞ்ச் கூட மாறவில்லை.

மதசார்பற்ற சமுக நீதி கொள்கை தான் நமது கொள்கை. அதில் இருந்து மாற போவதில்லை. 100 சதவீதம் இந்த விஷயத்தில் விஜயை நீங்கள் நம்பலாம். ஹிந்து ,முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான ஆளாக விஜய் எப்போதும் இருப்பேன்.

எம்மதமும் நம்மதம் அப்படி என்ற உண்மையின் முகம் தான் விஜயின் முகம்.சிங்கம் தனி வந்தாலும், தண்ணி காட்டிடும். இதை முரட்டு நம்பிக்கையில் கூறவில்லை. உலகம் முழுதும் கடவுள் கொடுத்துள்ள நம்மாட்கள் மீதான நம்பிக்கையில் சொன்னேன். விஜய் ஒன்று கூறனால், அதில் இருந்து மாறமாட்டேன். ஸ்டாலின் போன்று கிடையாது.

சிறுபான்மையினர் ஓட்டை வாங்குவதற்காக ஒரு பக்கம் கோடிக்கணக்கில் செலவு செய்து தமிழக காங்கிரசை தனது பைக்குள் போட்டுக் கொள்வது. மறுபக்கம் கட்சியை காப்பாற்ற பாஜவுடன் மறைமுக கூட்டணியில் இருக்க வேண்டியது. ஒரு பக்கம் கதர் வேஷம். மறுபக்கம் காவி வேஷம் போட வேண்டியது. பாஜவுக்கும், திமுகவுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது. 2 வருடத்திற்கு முன்பு சொன்னேன். அன்றைக்கு கூறியது. இன்று இந்தியா முழுதும் எதிரொலிக்கிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா இதனை தான் சொன்னார். ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு சொன்னார். இதற்கு மம்தா என்ன பதில் சொல்லப்போகிறார். மக்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.

இந்த தேர்தலில் திமுக தோற்பது உறுதி. தோற்ற பிறகு, தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் எனக்கூறுகிறேன். கட்சியை காப்பாற்ற வேண்டும் ஏகப்பட்ட வழக்கு உள்ளது. லஞ்ச வழக்கு,திருட்டு, ஊழல் வழக்கு. குடும்பம், அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது. காப்பாற்றிக் கொள்ள, மோடி, அமித்ஷா காலில் திமுக விழும்.சிறுபான்மை சகோதரர்களுக்கு அன்றைக்கு தெரியும். திமுகவின் சாயம் அன்றைக்கு வெளுக்கப்போகிறது.

அது மட்டும் இல்லாமல், பாஜவின் முதல் அடிமை யார் என்ற போட்டி வேறு. நீயா... நானா. யார் யாருக்கும். திமுகவுக்கும் மற்றும் பலருக்கும்.சிறுபான்மை சகோதரரோடு விஜய் கூட நிற்பேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.இப்போது சமீபத்தில் காமெடி நடக்கிறது. ஸ்டாலினும்,மற்றும்பலரும் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கடுப்பில விட்ட கணிப்பை விடுகின்றனர்.அதில் திமுக 300, மற்றும் பலர் 700 தொகுதிகளில் வெற்றி பெறும் என்கின்றனர். இவ்வளவு தொகுதி எங்குள்ளது. குருட்டாம்போக்கில் அடித்து விடுவது.

தில்லுமுல்லுவுக்கு அளவே இல்லை. 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விஜய்க்கு ஓட்டுப்போடுவார்களாம். 50 க்கு மேற்பட்டவர்கள் போனால் போகிறது என்று விஜய் போடுவார்களாம். 40 வயதுக்குள்ள வாக்காளர்கள் மிகவும் குறைவாம்.50 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் குறைவாம். அவர்கள் விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டார்களாம்.

தமிழகத்தில் இரண்டு முனை போட்டிதான். ஒன்று தீய சக்தி திமுக; மற்றொன்று தவெக. நீங்கள் தான் எனக்கு தேர்தலில் நீதி வழங்க வேண்டும்.

இவ்வாறு விஜய் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b