3 நாட்கள் தொடர் விடுமுறை - டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதல்
சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சட்டம்-ஒழுங்கை பேணும் வகையில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் முன்கூட்டியே விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று (21-ம் தேதி) காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு
T


சென்னை, 21 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சட்டம்-ஒழுங்கை பேணும் வகையில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் முன்கூட்டியே விடுமுறை அறிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (21-ம் தேதி) காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 23-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதியன்றும் கடைகள் மூடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று மாலை முதல் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர்.

குறிப்பாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் கடைகளின் முன்பு நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

மூன்று நாட்களுக்கு தேவையான மதுபானங்களை முன்கூட்டியே வாங்கிச் செல்ல மது பிரியர்கள் ஆர்வம் காட்டியதால், கடைகளில் வழக்கத்தை விட அதிகளவில் விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

பண்டிகை காலங்களை விட கூடுதலாக விற்பனை நடந்திருக்கலாம் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA