ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் வீட்டருகே ரூ.14 லட்சம் பணம் கைப்பற்றல்
தூத்துக்குடி, 21 ஏப்ரல் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் அமைப்பு செயலாளர் ஆர். சுந்தரராஜ், முப்புலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,
சுந்தர்ராஜன்


தூத்துக்குடி, 21 ஏப்ரல் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் அமைப்பு செயலாளர் ஆர். சுந்தரராஜ், முப்புலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.

தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சுந்தரராஜ் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தேர்தல் பறக்கும் படையினர் ஆறுமுகராஜ் தலைமையில் சோதனை நடத்தினர்.

அப்போது, அவரது வீடு அருகே இருந்த ஒரு சூட்கேஸில் கட்டுக்கட்டாக வைத்திருந்த ரூ.14 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சுந்தரராஜ் வீட்டில் சோதனை நடத்த வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர் தலைமையில் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணம் தேர்தல் தொடர்பானதா என்ற கோணத்தில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam