அடுத்த ஜென்மத்தில் இபிஎஸ் குஜராத்தில் பிறக்கட்டும் - கனிமொழி கடும் சாடல்
திருச்செந்தூர், 21 ஏப்ரல் (ஹி.ச.) திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அ
கனிமொழி


திருச்செந்தூர், 21 ஏப்ரல் (ஹி.ச.)

திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், சட்டமன்ற தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை குறித்த மசோதாவை மோடி அரசு தாக்கல் செய்ததாகவும் மோடிக்கு இந்த மசோதாவில் தோல்வி தான் கிடைத்தது என்றும் விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இந்த மசோதாவை நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து கருப்பு நாள் என்று அறிவித்ததாகவும் பெருமிதம் கூறினார்.

எதிர்கட்சித்தலைவர் நேற்று சேலத்தில் பிரசாரம் செய்த போது அடுத்த ஜென்மத்தில் மனிதனாக பிறக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் நான் இந்த தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன் என்று பேசியுள்ளார் என குறிப்பிட்ட கனிமொழி, தனக்கு அடுத்த ஜென்மத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது என்றார்.

அப்படியே எடபப்பாடி பழனிசாமி பிறந்தாலும் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டாம் என்றும் பாஜகவுக்கு கை கட்டி நிற்கும் பழனிசாமி அடுத்த ஜென்மத்தில் குஜராத்தில் பிறந்து கொள்ளட்டும் எனவும் காட்டமாக கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam