பார்வையற்ற மாணவர்கள் அயோத்தி ராம ஜென்மபூமி கோயிலில் தரிசனம்
அயோத்தி, 21 ஏப்ரல் (ஹி.ச.) ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள நாரி உதய் அறக்கட்டளையின் அந்த் பிரகாஷ் வித்யாலயாவைச் சேர்ந்த 30 பார்வையற்ற மாணவர்கள், இன்று அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலுக்குச் சென்று ராமபிரானை தரிசித்தனர். இது குறித்த
Visually Impaired Students Offer Prayers at Ayodhya Ram Janmabhoomi Temple


அயோத்தி, 21 ஏப்ரல் (ஹி.ச.)

ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள நாரி உதய் அறக்கட்டளையின் அந்த் பிரகாஷ் வித்யாலயாவைச் சேர்ந்த 30 பார்வையற்ற மாணவர்கள், இன்று அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலுக்குச் சென்று ராமபிரானை தரிசித்தனர்.

இது குறித்து பார்வையற்ற பக்தர்களின் பொறுப்பாளர் ராணி ஹூடா அஹ்லாவத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நாங்கள் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் ராமபிரானை தரிசிக்க அயோத்திக்கு வந்துள்ளோம்.

எனது பள்ளியில் படிக்கும் பார்வையற்ற மாணவர்கள் அனைவரையும் அழைத்து வந்துள்ளேன். கடவுள் இவர்களைக் காண்பார் என்ற நம்பிக்கையில் அழைத்து வந்தேன்.

ராமர் கோயிலில் பரிக்கிரமம் செய்து, அனுமன் சாலிசா பாராயணம் செய்தோம்.

பல்வேறு வகையான மாற்றுத்திறன்களைக் கொண்ட மாணவர்கள், கோயில் வருகையின்போது கிடைத்த ஆன்மிக அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b