Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 ஏப்ரல் (ஹி.ச.)
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து 700-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், முன்னாள் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி புகார் அளித்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில், பிரதமர் ஆற்றிய உரை அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் மூலம் ஒளிபரப்பப்பட்டதாகவும், இதன் மூலம் ஆட்சியிலுள்ள கட்சிக்கு அநியாயமான தேர்தல் பிரச்சார மேடை கிடைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அரசு இயந்திரம் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளின்படி, அதிகாரத்தில் உள்ளவர்கள் அரசு வளங்களை தேர்தல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதும், எந்தக் கட்சிக்கும் முன்னிலை கிடைக்காத வகையில் சமநிலை பேணப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த உரை அந்த விதிமுறைகளை மீறுவதாகவே அமைந்துள்ளதாக புகார் அளித்தவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், குற்றச்சாட்டை முழுமையாக விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்கவும், அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்கவும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த புகார் குறித்து தேர்தல் ஆணையம் எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறது என்பது அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்படும் முக்கிய அம்சமாக உள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P