பாமக உள்கட்சி குழப்பத்திற்கு ஸ்டாலின், மருமகன் காரணம் – அன்புமணி குற்றச்சாட்டு
சேலம், 21 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சேலம் மாவட்டத்தில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். அவருடன் கூட்டணிக் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து
அன்புமணி


சேலம், 21 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சேலம் மாவட்டத்தில் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

அவருடன் கூட்டணிக் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பெரும் திரளான மக்கள் பங்கேற்றனர். கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ்,

அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியான என்டிஏ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் இபிஎஸ் இன்னும் இரண்டு மாதங்களில் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். அவர் ஒரு விவசாயி, சேலம் மண்ணின் மைந்தன் என்பது அனைவருக்கும் பெருமைஎன்றார்.

மேலும், தமிழ்நாட்டிற்கு மாற்றம் தேவை. தற்போதைய ஆட்சியில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். பெண்கள், தாய்மார்கள் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பார்கள்; அவர்களால் மாற்றம் உருவாகும்” எனவும் தெரிவித்தார்.

இதனுடன், வேலைவாய்ப்பு உருவாக்கம், விவசாய மேம்பாடு, அடிப்படை வசதிகள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் கூட்டணி சார்பில் முன்வைத்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam