வாக்காளர்கள் 12 மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தகவல்
திருநெல்வேலி, 22 ஏப்ரல் (ஹி.ச) தேர்தலில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் தங்கள் தேர்தல் புகைப்பட அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட 12 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை கொண்டு சென்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் காண்பித்து வா
12 Alternative Documents


திருநெல்வேலி, 22 ஏப்ரல் (ஹி.ச)

தேர்தலில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் தங்கள் தேர்தல் புகைப்பட அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட 12 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை கொண்டு சென்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் காண்பித்து வாக்களிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.சுகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நாளை (23.04.2026) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. தேர்தல் நாளன்று காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தங்களது பாகத்திற்குட்பட்ட வாக்குசாவடிகளில் வாக்களிக்கலாம்.

மேலும், வாக்காளர்கள் தங்களது பெயர் இடம்பெற்றுள்ள வாக்காளர் பட்டியல் விபரம் குறித்து அறிந்து கொள்ளும் வகைக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர் மூலம் வாக்காளர் தகவல் சீட்டு – பூத் சிலிப் (Voter Information Slip) வழங்கப்பட்டுள்ளது.

மேலும், https://voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட வாக்காளர் தகவல் சீட்டு வாக்களிப்பதற்கான ஆவணமாகாது. அது வாக்குசாவடியினை அறிந்து கொள்வதற்கான தகவல் அறிக்கை மட்டுமே.

தேர்தலில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் தங்கள் தேர்தல் புகைப்பட அடையாள அட்டை (EPIC - Electoral Photo Identity Card) அல்லது பின்வரும் அங்கீகரிக்கப்பட்ட 12 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை கொண்டு சென்று வாக்குச்சாவடி அலுவலர்களிடம் காண்பித்து வாக்களிக்கலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாற்று அடையாள ஆவணங்கள்

1. ஆதார் அட்டை AC

2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை MNREGA

3. புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்கு, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் PB

4. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு Smard Card HIS

5. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் PD

6. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN CARD) PC

7. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட Smart Card SC

8. கடவுச்சீட்டு (Passport) PPT

9. மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் SID

10. நாடாளுமன்ற, சட்டப்பேரவை, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை OID

11. ஓட்டுநர் உரிமம் (Driving License) DL

12. சமூக நீதி மற்றும் அங்கீகாரம் அளித்தல் அமைச்சகத்தால் மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்படும் தனித்துவமான அடையாள அட்டை UDID

திருநெல்வேலி மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டி கேட்டுக் கொள்ளப்படுகிறது

என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b