Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. வெளியூர்களில் வசிக்கும் மக்கள் வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், நாளை நடைபெறும் சட்டமன்றத் முன்னிட்டு, பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் விபரம் வருமாறு,
நேற்று நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1339 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 3,431 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,88,705 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன், இதுவரை 18,633 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
2026 -சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b