அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் - இன்பதுரை
சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தல் வெளிப்படையாகவும், முறைகேடுகள் இல்லாமல் நடைபெறவும் இந
இன்பதுரை


சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தேர்தல் வெளிப்படையாகவும், முறைகேடுகள் இல்லாமல் நடைபெறவும் இந்த கண்காணிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், சில மாவட்டங்களில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளதாக அதிமுக இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது;

சிசிடிவி குறைக்கப்பட்டால் வாக்குச்சாவடி கைப்பற்றல், கள்ள ஓட்டுப்பதிவு, வாக்காளர்களை அச்சுறுத்தல் போன்ற முறைகேடுகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கவலை எழுந்துள்ளது.

மேலும், தேர்தல் ஆணையம் முன்னதாகவே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு வசதிகளை உறுதி செய்ய உத்தரவிட்டிருந்தது.

குறிப்பாக, முக்கிய மற்றும் அதிரடி வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை எந்த சூழலிலும் குறைக்காமல் இருக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் நேரடியாக தலையிட்டு மாவட்ட வாரியாக ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவின் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam