அஜித் குமார் மரண வழக்கு குற்றப்பத்திரிகை ரத்து கோரி மனு – சிபிஐக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை, 22 ஏப்ரல் (ஹி.ச.) மதுரை உயர்நீதிமன்ற கிளை யில், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. மதுரை விரகனூரைச் சேர்ந்த ரமேஷ்குமார் தனது மனுவில், மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் தொடர்பான நகை திருட்டு வழக்கில் 2025 ஜ
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 22 ஏப்ரல் (ஹி.ச.)

மதுரை உயர்நீதிமன்ற கிளை யில், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.

மதுரை விரகனூரைச் சேர்ந்த ரமேஷ்குமார் தனது மனுவில், மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் தொடர்பான நகை திருட்டு வழக்கில் 2025 ஜூன் 27ஆம் தேதி விசாரணைக்கு பிறகு, சிறப்பு விசாரணை குழுவினர் அஜித் குமாரை வெளியே அழைத்துச் சென்றதாகவும், பின்னர் அவர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மரண வழக்கில், மத்திய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் தன்னுடைய பெயருடன் மேலும் நான்கு பேரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தன்னுடன் தொடர்பில்லாத இந்த வழக்கில் தேவையின்றி பெயர் இணைக்கப்பட்டதாகவும், இதற்காக போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, தன் பெயரையும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீதிபதி புகழேந்தி, வழக்கு தொடர்பாக சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam