Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 22 ஏப்ரல் (ஹி.ச.)
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவமதிப்பாக கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, பாஜக கட்சியினர் கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இந்த தொடர்பில் தேர்தல் ஆணையத்திடமும் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறியதாவது:-
பிரதமரை அவமதிப்பது காங்கிரஸின் வழக்கமாகிவிட்டது.
பிரதமருக்கு எதிராக தொடர்ந்து அவதூறாக பேசுவதை அவர்கள் இயல்பாகக் கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியடைந்து வருவதால் ஏற்பட்ட விரக்தியிலேயே இத்தகைய கருத்துகளை வெளியிடுகின்றனர்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்
என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA