தமிழக தலைமை செயலாளர் நியமனம் தொடர்பான வழக்கு தள்ளுபடி
சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச) தமிழக தலைமை செயலாளராக சாய்குமாரை நியமித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்மு
High court


சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச)

தமிழக தலைமை செயலாளராக சாய்குமாரை நியமித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

பணி தொடர்பான விஷயங்களை பொது நல வழக்காக (PIL) கருத முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

முன்னதாக, தமிழக தலைமை செயலாளராக இருந்த முருக்கானந்தத்தை மாற்றி, சாய்குமாரை நியமித்ததை எதிர்த்து, அறந்தாங்கியை சேர்ந்த வீராசாமி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில்,

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, சாய்குமார் அவரது செயலாளராக பணியாற்றியவர் என்பதால் இந்த நியமனம் சர்ச்சைக்குரியது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ