சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச) குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தலில் வாக்களிக்க அனுமதி கோரி ஹரிநாடார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தல
Gg


சென்னை, 22 ஏப்ரல் (ஹி.ச)

குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்தலில் வாக்களிக்க அனுமதி கோரி ஹரிநாடார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

விசாரணையின் போது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவுகளை மேற்கோள்காட்டிய நீதிமன்றம்,

குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளவர்களுக்கும்,

விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கும்,

வாக்களிக்கும் அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தது.

மேலும், ஹரிநாடாருக்கு எதிராக மூன்று குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், தடுப்புக் காவலில் (preventive detention) உள்ளவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து வாக்களிக்க அனுமதி வழங்கலாம் என மதுரை அமர்வு முன்பு உத்தரவிட்டிருந்ததை சுட்டிக்காட்டியது.

ஆனால், இவ்வழக்கில் அந்த விதிவிலக்கு பொருந்தாது எனக் கூறிய நீதிமன்றம், ஹரிநாடார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ